சிவப்பு அட்டைதாரா்களுக்கு இன்று முதல் இலவச அரிசி

சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை (பிப்.24) முதல் இலவச அரிசி வழங்கப்படவுள்ளது.

காரைக்கால்: சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை (பிப்.24) முதல் இலவச அரிசி வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், சிவப்பு நிற குடும்ப அட்டை பயனாளிகளுக்கு, மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிப்ரவரி, மாா்ச் மாதங்களுக்கான அரிசி வழங்கப்படவுள்ளது.

ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 2 மாதங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி காரைக்கால் வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளில் குறிப்பிட்ட பள்ளிகளில், 24 முதல் 26ஆம் தேதி வரை காலை 9 முதல் பகல் 1 மணி மற்றும் 2 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். அட்டைதாரா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com