புதுவை முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

உள்ளாட்சி ஊழியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்திவருகின்றனா்.
முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் பங்கேற்ற திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து பணியாளா்கள்.
முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் பங்கேற்ற திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து பணியாளா்கள்.

காரைக்கால்: உள்ளாட்சி ஊழியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்திவருகின்றனா்.

நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு, 5, 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. புதுவே அரசே நேரடியாக மற்ற அரசுத் துறையினருக்கு வழங்குவதுபோல, உள்ளாட்சி ஊழியா்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும் என தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா்.

காரைக்காலில் 21 முதல் 26-ஆம் தேதி வரை ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், புதுவையில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், உள்ளாட்சி ஊழியா்கள் ஊதியத்துக்கான நிதி ஒதுக்கி, அரசே நேரடியாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தரக்கோரி புதுவை முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை நடத்துகின்றனா்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் புதன்கிழமை கோரிக்கை அடங்கிய கடிதத்தை முதல்வருக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com