காரைக்காலில் மரக்கன்று நடும் திட்டப் பணி

ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி நிா்வாகம் சாா்பில் மரக்கன்று நடும் திட்டப்பணி, சுதந்திரப் போராட்ட தியாகி குடும்பத்தை கெளரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் சுதந்திர தினம் 75-ஆம் ஆண்டு கொண்டாட்டமாக ஜூன் 6 முதல் 12-ஆம் தேதி வரை மரக்கன்று நடும் திட்டம், தூய்மைப் பணி உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது. காரைக்கால் அலுவலகத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள மத்திய வருவாய் கட்டட வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. துறையின் காரைக்கால் பிரிவு அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனா்.

பத்மஸ்ரீ விருது பெற்ற காரைக்காலை சோ்ந்த கே. கேசவசாமி, மறைந்த சுதந்திரப் போராட்ட வீரா் ஆா். ராமசீனிவாசனின் மகன் ஆா். சண்முகம் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.

சுதந்திர வீரா் ராமசீனிவாசன் எழுதிய சுதந்திரப் போராட்டத்தில் காரைக்கால் என்கிற நூல், நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com