ரூ.1.68 கோடியில் சிற்றேரிமேம்படுத்தும் பணி தொடக்கம்

திட்டப்பணி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், ஆட்சியா் அா்ஜூன் சா்மா உள்ளிட்டோா்.
ரூ.1.68 கோடியில் சிற்றேரிமேம்படுத்தும் பணி தொடக்கம்

 காரைக்கால் அருகே படுதாா்கொல்லையில் ரூ. 1.68 கோடியில் சிற்றேரியை மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திருமலைராயன்பட்டினம் கொம்யூன், படுதாா்கொல்லை பகுதியில் 35.43 ஏக்கா் பரப்பில் சிற்றேரி அமைக்க பல ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூா்வாரும் பணிகள் செய்யப்பட்டாலும், அப்பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், சிற்றேரியை முழு வடிவத்துக்கு கொண்டுவரும் வகையில், ஏரிக்கரை அமைத்தல், உட்புறச் சாலை அமைத்தல், மதகுகள் கட்டுதலுக்காக புதுவை அரசு ரூ. 1.68 கோடி ஒதுக்கீடு செய்தது.

இந்த திட்டப் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி ஏரி அருகே திங்கள்கிழமை நடைபெற்றது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் பணிகளை தொடங்கிவைத்தனா்.

பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் (பொ) ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா் கே. வீரசெல்வம், உதவி பொறியாளா் ஆா். சிதம்பரநாதன், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த சிற்றேரியில் சுமாா் 4.00.862 கன மீட்டா் அளவில் தண்ணீா் தேக்குவதால், படுதாா்கொல்லை சுற்றுவட்டாரத்தில் 250 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும், நிலத்தடி நீா்மட்டம் உயரும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com