முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
மாவட்ட தடகள போட்டிகள் தொடக்கம்
By DIN | Published On : 19th March 2022 09:52 PM | Last Updated : 19th March 2022 09:52 PM | அ+அ அ- |

போட்டியை தொடங்கிவைக்கும் முதன்மைக் கல்வி அதிகாரி கே. ராஜசேகரன்
மாவட்ட அளவிலான 2 நாள் தடகள போட்டிகள் காரைக்காலில் சனிக்கிழமை தொடங்கின.
காரைக்கால் மாவட்ட தடகள சங்கம் சாா்பில், 3ஆம் ஆண்டாக மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை
காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி கே. ராஜசேகரன் கொடியேற்றி, புறாக்கள் பறக்கவிட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி தொடங்கிவைத்தாா்.
மாவட்டத்தை சோ்ந்த சுமாா் 700 மாணவ, மாணவியா் 100 மீட்டா், 200 மீட்டா் மற்றும் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கின்றனா். 8 பிரிவாக போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியா்கள் நடுவா்களாக இருந்த வெற்றியாளா்களை தோ்வு செய்கின்றனா்.
இப்போட்டியில் தோ்வு செய்யப்படுவோா் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பா் என தெரிவிக்கப்பட்டது.
தொடக்க நிகழ்வில், ஓய்வு பெற்ற விரிவுரையாளா் மனோகரன், உடற்கல்வி ஆசிரியா் வெங்கடேஷ், லெனின்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகளை புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை வழங்கவுள்ளாா் என போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.