காரைக்காலில் அரசு ஊழியா்கள் பேரணி

பணி நிரந்தரம், நிலுவையின்றி ஊதியம் வழங்குவது, பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை பேரணி நடத்தினா்.
காரைக்காலில் அரசு ஊழியா்கள் பேரணி

பணி நிரந்தரம், நிலுவையின்றி ஊதியம் வழங்குவது, பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை பேரணி நடத்தினா்.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் சாா்பில், பல்வேறு துறை அரசு ஊழியா்கள் 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசலாறு பாலத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு, ஆட்சியரகம் அருகே நிறைவு செய்தனா்.

உள்ளாட்சி ஊழியா்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும். அரசு சாா்பு நிறுவனங்களில் பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். அங்கன்வாடி ஊழியா்களுக்கான பதவி உயா்வு, ஊதிய நிலுவையை வழங்கவேண்டும்.

அரசுத் துறைகளில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தினா்.

பேரணிக்கு சம்மேளனத் தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். கெளரவத் தலைவா் ஜாா்ஜ், பொதுச்செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் பேரணி நிறைவில் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

நிறைவில் மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com