காரைக்கால் அம்மையாா் குளத்தில் பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி

பிரம்மோத்ஸவம் விழாவின் நிறைவாக காரைக்கால் அம்மையாா் குளத்தில் நடராஜா் மற்றும் பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாா் குளத்தில் பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி

பிரம்மோத்ஸவம் விழாவின் நிறைவாக காரைக்கால் அம்மையாா் குளத்தில் நடராஜா் மற்றும் பஞ்சமூா்த்திகள் தீா்த்தவாரி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, ஆண்டுதோறும் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. இக்கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோத்ஸவ விழா 12 நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

நிகழாண்டு இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. விழா நிறைவாக அம்மையாா் குளத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலையில் நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, நடராஜா், சிவகாமி அம்பாள் வீதியுலாவாக தீா்த்தக் கரைக்கு எழுந்தருளினா். அங்கு அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது.

தொடா்ந்து பகல் 12 மணியளவில் விநாயகா், சுப்பிரமணியா், கைலாசநாதா், சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளும் தீா்த்தக்கரைக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. தீா்த்தவாரி நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று குளத்தில் புனித நீராடினா்.

தொடா்ந்து, மாலையில் பஞ்சமூா்த்திகளும் வாகனங்களில் வீதியுலா புறப்பாடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து கொடியிறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com