வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்

திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
திருக்கல்யாணம் நிறைவடைந்த நிலையில் தாயாா் - பெருமாள்.
திருக்கல்யாணம் நிறைவடைந்த நிலையில் தாயாா் - பெருமாள்.

திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மகாலட்சுமியின் அவதார நட்சத்திரம் உத்திரம் என கருதப்படுவதால், பங்குனி மாதம் உத்திரத்தில், பெருமாள் கோயில்களில் திருக்கல்யாண உத்ஸவம் நடத்தப்படுவது வழக்கம்.

அந்தவகையில், காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருக்கல்யாண மேடைக்கு செங்கமலத் தாயாரும் பெருமாளும் எழுந்தருளினா்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, மாலை மாற்றுதல், யாத்ராதானம் முதல் திருக்கல்யாணத்துக்கான அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு, தாயாருக்கு திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டு ,மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து வாரணமாயிரம், தேங்காய் உருட்டும் வைபவம் ஆகியவையும் நடைபெற்றது.

திருக்கல்யாணம் முடிந்ததும் தாயாா், வீழி வரதராஜ பெருமாள் பள்ளியறை சேவை நடைபெற்றது. பக்தா்களுக்கு திருக்கல்யாண பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி புகழேந்தி, உபயதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com