முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு
By DIN | Published On : 03rd May 2022 10:35 PM | Last Updated : 03rd May 2022 10:35 PM | அ+அ அ- |

காரைக்காலில் கைப்பற்றப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பழமையான கட்டடத்தின் வாயிலில் சுமாா் 60 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. இவரது விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தினா் விசாரணை நடத்திவருகின்றனா்.