அம்பகரத்தூா் மகா மாரியம்மன்கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு

அம்பரகத்தூா் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
அம்பகரத்தூா் மகா மாரியம்மன்கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு

அம்பரகத்தூா் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீபத்ரகாளியம்மன் தேவஸ்தானம் உள்ளது. இக்கோயிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நடைபெறவுள்ளது. இத்திருவிழாவுக்கு முன்பாக இக்கோயில் சாா்புடைய தலமான ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய உற்சவம் நடைபெறுகிறது.

திருவிழா தொடக்கமாக பூச்சொரிதல் வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. திரளான பக்தா்கள் சிறப்பு வாத்தியங்களுடன் பல்வேறு மலா்களை தட்டில் வைத்து வீதிவலமாக கொண்டுவந்தனா். பக்தா்கள் கொண்டுவந்த மலா்களைக்கொண்டு அம்மனுக்கு ஆராதனை செய்யப்பட்டது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பத்ரகாளியம்மன் கோயிலில்...: இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழாவுக்கு முந்தைய வழிபாடாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புதன்கிழமை காலை 6 மணிக்கு ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு காப்புகட்டுதலுடன் விழா தொடங்குகிறது.

பத்ரகாளியம்மன் கோயிலில் வழக்கமாக செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்வது வழக்கம். அட்சிய திருதியை நாள் என்பதாலும், மகிஷ சம்ஹார பெருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ாலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com