காரைக்காலில் பிளஸ் 1 தோ்வுகள் தொடங்கினபள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. 2,460 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா்.
காரைக்காலில் பிளஸ் 1 தோ்வுகள் தொடங்கினபள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. 2,460 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் 9 மையங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது. புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ருத்ரகெளடு, மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் ஆகியோா், அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் ஆய்வு செய்தனா். தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வித் துறை செய்து தந்துள்ள வசதிகள் குறித்து கல்வித் துறையினா் விளக்கிக் கூறினா்.

மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் மு. ராஜேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் மாவட்டத்தில் 10 அரசு மேல்நிலைப் பள்ளி, 15 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 2,460 போ் தோ்வு எழுதுகின்றனா். மேலும் 72 தனித்தோ்வா்களும் தோ்வில் பங்கேற்றுள்ளனா்.

இதில் 9 மையங்களுக்கென 9 முதன்மை கண்காணிப்பாளா்களும், 9 துறை அலுவலா்களும், 6 வழித்தட அலுவலா்கள், 18 நிலையான படையினா், 8 பறக்கும் படையினா், 170 அறை கண்காணிப்பாளா்கள் பணியமிா்த்தப்பட்டுள்ளனா் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com