காரைக்காலில் முத்துமாரி நாகாத்தம்மன் கோயில் குடமுழுக்கு

காரைக்கால் பகுதியில் ஸ்ரீ முத்துமாரி நாகாத்தம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயில் விமான கலசத்தில் ஊற்றப்படும் புனிதநீா்.
கோயில் விமான கலசத்தில் ஊற்றப்படும் புனிதநீா்.

காரைக்கால் பகுதியில் ஸ்ரீ முத்துமாரி நாகாத்தம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் சிங்காரவேலா் சாலையில் சிறிய அளவில் ஸ்ரீ முத்துமாரி நாகாத்தம்மன் வழிபாட்டுத் தலம் அமைந்திருந்த நிலையில், இதை விரிவுபடுத்தி கோயில் கட்டப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா். மருளாளிகள், நகரவாசிகள், குடமுழுக்கு விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். பகல் 1 மணியளவில் காரைக்கால் வந்த புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாா். கோயில் நிா்வாகத்தினா் அவருக்கு பிரசாதம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com