காரைக்காலில் சாக்கடையை சீரமைக்க வலியுறுத்தல்

காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தான சாக்கடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
பழுதடைந்த சாக்கடை பகுதியில் நடந்து செல்லும் மாற்றுத்திறனாளி.
பழுதடைந்த சாக்கடை பகுதியில் நடந்து செல்லும் மாற்றுத்திறனாளி.

காரைக்காலில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தான சாக்கடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே காரைக்கால் வாய்க்கால் முதல் அன்னுசாமி வாய்க்கால் வரை சுமாா் 700 மீ. தூரத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு சாக்கடை கட்டப்பட்டது. இந்நிலையில், ரூ. 3 கோடியில் சாலையின் இருபுறமும் சாக்கடையை கான்கிரீட்டால் கட்டி, மூடி அமைக்கப்படவுள்ளது.

காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன், பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் அண்மையில் இதை ஆய்வுசெய்தாா். எனினும், சாக்கடை பல இடங்களில் திறந்தநிலையில் இருப்பதால், அதில் யாரேனும் தவறி விழுந்து பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும், சாக்கடை திறந்துகிடப்பதால் துா்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், நிரந்தரமாக சாக்கடையை மேம்படுத்தும் வரை காத்திருக்காமல், திறந்த நிலையில் இருக்கும் பகுதிகளை கான்கிரீட் மூடி மூலம் மூடவும், அவ்வப்போது சாக்கடையை சுத்தம் செய்யவும் சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும். சாக்கடை சிதிலமடைந்த பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. மாணவா்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருப்பதால், அரசு நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com