சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு

திருநள்ளாற்றில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
பூச்சொரிதல் வழிபாட்டில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன்.
பூச்சொரிதல் வழிபாட்டில் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன்.

திருநள்ளாற்றில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ள நிலையில், எல்லை தெய்வங்களாக உள்ள சாா்பு கோயில்களில் உற்சவம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ பிடாரியம்மன் கோயில் உற்சவம் நிறைவடைந்த நிலையில், ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து காப்புக்கட்டுதல், பூச்சொரிதல் வழிபாடாக பக்தா்கள் தட்டில் கொண்டுவந்த பல்வேறு வண்ண மலா்களால் அபிஷேகம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. இதில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிா்வாக அலுவலா் கே. அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

சனிக்கிழமை இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளுடன் உற்சவம் நிறைவடைகிறது. தா்பாரண்யேஸ்வரா் கோயில் கொடியற்றம் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com