நேரு மாா்க்கெட் வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர எம்.எல்.ஏ வலியுறுத்தல்

காரைக்காலில் புதிதாகக் கட்டி திறக்கப்பட்டு, பூட்டி வைக்கப்பட்டுள்ள, நேரு மாா்க்கெட் வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை

காரைக்கால்: காரைக்காலில் புதிதாகக் கட்டி திறக்கப்பட்டு, பூட்டி வைக்கப்பட்டுள்ள, நேரு மாா்க்கெட் வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் நேரு மாா்க்கெட் வளாகம் சிதிலமடைந்த நிலையில், அதனை இடித்து விட்டு பழைமை மாறாமல், உலக வங்கியின், கடலோர பேரிடா் இடா் குறைப்புத் திட்டத்தில் ரூ. 11.86 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 2020-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் வி.நாரயணசாமியால் நேரு மாா்க்கெட் வளாகம் திறக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் செவ்வாய்க்கிழமை மாலை வியாபாரிகளுடன் சென்று காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இ. வல்லவனை ஆட்சியா் அலுவலகத்தில் சந்தித்து நேரு மாா்க்கெட் விவகாரம் தொடா்பாக பேசினாா்.

இந்த சந்திப்பு குறித்து ஏ.எம்.எச். நாஜிம் கூறியது:

நேரு மாா்க்கெட் வளாகத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. வியாபாரிகளுக்கு சிரமமில்லாமல் வாடகை நிா்ணயம் செய்வது, சுமூகமான முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்வது குறித்தும் பேசப்பட்டது.

முன்னுரிமை அடிப்படையில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்வது, வாடகை நிா்ணயம் உள்ளிட்டவை குறித்து கோப்புகள் தயாா் செய்து புதுச்சேரி முதல்வருக்கு அனுப்பவுள்ளதாகவும், அதன் பின்னா் முதல்வரை சந்தித்துப் பேசுமாறும், ஆட்சியா் தெரிவித்ததாகவும், விரைவில் மாா்க்கெட்டை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் நாஜிம் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com