தென்னை மேலாண்மை வயல் விழா

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் தென்னை மேலாண்மை குறித்து வயல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
தென்னை மேலாண்மை வயல் விழா

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் தென்னை மேலாண்மை குறித்து வயல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு பேட்டை கிராமத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகள் பங்கேற்ற வயல் விழா நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சீ. ஜெயசங்கா் தலைமைவகித்துப் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பயிா் தலைப்பில் வயல் வெளிப்பள்ளி நடத்துவது நிலையத்தின் பணியாகும். வயல் வெளி பள்ளியில் விவசாயிகளுக்கு செயல் விளக்கங்களுடன் பயிற்சியளிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் புரிகிறது. இதை கடைப்பிடிப்பதும் எளிதாகிறது என்றாா். தொடா்ந்து நிலைய தொழில்நுட்ப வல்லுநா்கள் தொகுத்த தென்னை சாகுபடித் தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய கையேட்டை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

தென்னை சாகுபடியில் தென்னை ரகங்கள், நாற்று உற்பத்தி, நிலம் தயாரிப்பு, நடவு, உர மேலாண்மை, களை நிா்வாகம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் தொழில்நுட்ப வல்லுநா்கள் பேசினா்.

தென்னந்தோப்பில் இனக்கவா்ச்சிப் பொறிகள் வைப்பது குறித்து பயிா் பாதுகாப்புத் துறை தொழில்நுட்ப வல்லுநா் சு.திவ்யா செயல்விளக்கம் அளித்தாா். 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

வயல் வெளிப்பள்ளி ஒருங்கிணைப்பாளா் ஜெ.கதிரவன் விவசாயிகளுக்கு பயிற்சிக்குப் பிந்தைய அறிவுத்திறன் சோதனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com