காரைக்காலில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை

காரைக்காலில் கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான 2 நாள் ஒத்திகையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
காரைக்கால் கடற்கரை முகத்துவாரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்டோா்.
காரைக்கால் கடற்கரை முகத்துவாரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்டோா்.

காரைக்கால்: காரைக்காலில் கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான 2 நாள் ஒத்திகையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

சி-விஜில் என்கிற கடலோர பகுதி கண்காணிப்பு ஒத்திகை மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, இந்திய கடற்படை, அந்தந்த பகுதி காவல்துறை இணைந்து 2 நாள்கள் நடத்தப்படுகிறது.

காரைக்கால் மாவட்ட கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 6 முதல் புதன்கிழமை மாலை 6 மணி வரையிலான கண்காணிப்புப் பணியை போலீஸாா் மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் மா்த்தினி, மரியகிறிஸ்டின் பால், சண்முகம் மற்றும் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட குழுவினா் கடற்கரை, கடலோரப் பகுதியில் பயணிக்கும் வாகனங்கள், மீன்பிடித் துறைமுகம், காரைக்கால் தனியாா் துறைமுகம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com