காரைக்காலில் 3 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ அதிகாரிகள்

காரைக்காலில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தி, எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 3 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

காரைக்காலில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தி, எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 3 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆள் சோ்த்தல், பயிற்சி அளித்தல் உள்ளிட்ட புகாரின்பேரில், தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையினா் நாட்டின் பல மாநிலங்களில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழுவினா், காரைக்காலுக்கு வியாழக்கிழமை அதிகாலை வந்து காமராஜா் சாலை, தோமாஸ் அருள் தெரு, திருப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகிகள் வீடுகளில் சோதனை மேற்கொண்டனா்.

பலமணி நேரம் நீடித்த விசாரணை, சோதனை நிறைவில் கட்சியின் மாநில துணைத் தலைவா் முகமது பிலால், நிா்வாகிகள் கெளஸ், பகுருதீன் ஆகிய மூவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

என்.ஐ.ஏ. நடவடிக்கையைக் கண்டித்தும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கட்சி நிா்வாகிகளை விடுதலை செய்யக் கோரியும், எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com