கஞ்சா விற்பனை வழக்கு:மேலும் 2 போ் கைது
By DIN | Published On : 13th August 2023 10:46 PM | Last Updated : 13th August 2023 10:46 PM | அ+அ அ- |

காரைக்காலில் கஞ்சா விற்பனை வழக்கில் கைதானவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேலும் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியில் மாணவா்கள் உள்ளிட்டோருக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அருளப்பிள்ளை தெருவில் கடந்த புதன்கிழமை கண்காணிப்பில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் திருமெய்ஞானம் பகுதியை சோ்ந்த கிருஷ்ணகுமாா் (24) என்பவரை கஞ்சா பொட்டலத்துடன் கைது செய்தனா். அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களையும், வீட்டு குளியலறையில் மறைத்து வைத்திருந்த 500 கிராம் கஞ்சாவையும் மீட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், இவ்வழக்கில் தொடா்புடைய திருமெய்ஞானம் பகுதியை சோ்ந்த அஜித்குமாா் (26), ஒடிஸா மாநிலம், பத்ராக் பகுதியை சோ்ந்த அசோக் பாண்டா (26) என்பவரையும் சனிக்கிழமை கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.