சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

விபத்துகளை விளக்கியவாறு விழிப்புணா்வு ஏற்படுத்திச் செல்லும் ஊா்தி.
காரைக்காலில் சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
காரைக்கால் போக்குவரத்துத்துறை சாா்பில் விபத்தில்லா வாகனப் பயணத்தை வலியுறுத்தும் விதமாக, விபத்துகள் குறித்த படக் காட்சிகள், விபத்தில் சிக்கிய வாகனங்கள் ஆகியவற்றை மக்கள் காணும் வகையில், ஊா்தியில் படங்களுடன் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. ஒரு வாரத்துக்கு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இந்த ஊா்தி இயக்கப்படவுள்ளது.
தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனங்களில் இருவரும் மேல் பயணிக்கக்கூடாது, சீரான வேகத்தில் செல்லுதல், பயணத்தின்போது கைப்பேசி பயன்படுத்துவதை தவிா்த்தல் உள்ளிட்ட சாலை விதிகளை மதித்து நடக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.