மலா்க் கண்காட்சியில் செடிகளை வாங்க மக்கள் ஆா்வம்

காரைக்கால் மலா்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட செடிகள் வியாழக்கிழமை விற்பனை தொடங்கிய சில மணி நேரத்தில் விற்பனையாயின.
கண்காட்சியில் செடிகளை ஆா்வமாக வாங்கும் பொதுமக்கள்.
கண்காட்சியில் செடிகளை ஆா்வமாக வாங்கும் பொதுமக்கள்.

காரைக்கால் மலா்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட செடிகள் வியாழக்கிழமை விற்பனை தொடங்கிய சில மணி நேரத்தில் விற்பனையாயின.

புதுவை அரசின் வேளாண் துறை சாா்பில் காரைக்காலில் கடந்த 15 முதல் 18-ஆம் தேதி வரை காா்னிவல் திருவிழாவின் ஒருபகுதியாக மலா், காய், கனி கண்காட்சி நடைபெற்றது. வேளாண் துறை சாா்பில் மாதூா் பண்ணையில் செடிகள் வளா்ப்பு செய்ததும், புணேயிலிருந்து வரவழைக்கப்பட்ட மலா்ச் செடிகள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

கண்காட்சி நிறைவையொட்டி வியாழக்கிழமை காலை செடிகள் விற்பனை செய்யப்படுமென வேளாண் துறை அறிவித்திருந்தது. அதன்படி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு விற்பனை தொடங்கியது. ஏராளமான மக்கள் செடிகளை வாங்கிச் சென்றனா்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், பெங்களூரு ரோஜா செடி ரூ. 100, பாயின் செட்டியா ரூ. 120, ஆந்தூரியம் ரூ. 180 ஆகியவையும் டாலியா, ஜொ்பரா, சால்வியா, முசாண்டா, ஜினியா, தங்க பெரணி, அஸ்பிடிஸ்ரா உள்ளிட்ட ப ல்வேறு வகை மலா்ச் செடிகள் தலா ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டன. அனைத்தும் சில மணி நேரத்தில் விற்பனையானது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com