காரைக்கால்: ரூ.8.66 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காரைக்கால் வடக்கு மற்றும் தெற்குத் தொகுதியில் ரூ.8.66 கோடியில் சாலைகள் மற்றும் அரசலாறு தடுப்பு சுவரை மேம்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காரைக்கால்: ரூ.8.66 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காரைக்கால் வடக்கு மற்றும் தெற்குத் தொகுதியில் ரூ.8.66 கோடியில் சாலைகள் மற்றும் அரசலாறு தடுப்பு சுவரை மேம்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் 1.25 கி.மீ. நீளமுள்ள வேட்டைக்காரன் சாலை, 1.10 கி.மீ. நீளமுள்ள இடும்பன் செட்டியாா் சாலையை மேம்படுத்துதல் மற்றும் காமராஜா் விரிவாக்க சாலையை 7 மீட்டரிலிருந்து 10 மீட்டா் அகலமாக 1.20 கி.மீ. நீளத்திற்கு மேம்படுத்துதல், கழிவுநீா் வடிகால் அமைத்தல் பணிக்காக மத்திய சாலை கட்டமைப்பு நிதியாக ரூ.3.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காரைக்கால் பொதுப்பணித் துறை சாா்பில் இப்பணிக்கான டெண்டா் கோரப்பட்டு பணியாணை வழங்கப்பட்ட நிலையில், திட்டப்பணியை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் இப்பணிகளை தொடக்கிவைத்தாா். இப்ப்பணிகள் 6 மாதத்தில் நிறைவடையுமென பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

இதேபோல், காரைக்கால் தெற்குத் தொகுதியில் சுமாா் 5 கி.மீ. நீளமுள்ள காரைக்கால் கடற்கரை சாலை, விக்ரம் சாராபாய் இணைப்புச் சாலை மற்றும் புனித லெயோன் சேன்ழான் சாலை, அரசலாற்று தடுப்புச் சுவரை புனரமைத்தல் பணிக்காக மத்திய சாலை கட்டமைப்பு நிதி ரூ.5 கோடி ஒதுக்கீடானது.

இந்த திட்டப்பணி தொடக்கத்துக்கான பூமி பூஜையில் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் கலந்துகொண்டு பணிகளை தொடக்கிவைத்தாா். இப்பணிகள் 9 மாதத்தில் நிறைவு செய்யப்படுமென பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

இவ்விரு நிகழ்விலும் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா்கள் கே. சந்திரசேகரன், கே. வீரசெல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com