நகராட்சியால் பிடிக்கப்பட்ட மாடுகள் நாளை ஏலம்
By DIN | Published On : 22nd January 2023 12:00 AM | Last Updated : 22nd January 2023 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால் நகராட்சியால் சாலைகளில் சுற்றித்திரிந்து பிடிக்கப்பட்ட மாடுகள் திங்கள்கிழமை ஏலம் விடப்படவுள்ளன.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்து, நகராட்சியால் கடந்த டிச.23-ஆம் தேதி பிடிக்கப்பட்ட மாடுகளில், மாடுகளின் உரிமையாளா்களால் அபராத தொகை செலுத்தி மீட்கப்படாத மாடுகள் ஏலம் விடப்படவுள்ளன.
நகராட்சி ஏல நிபந்தனைகளின்படி ஜன.23-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு கோட்டுச்சேரி, 34, முத்துசாமி பிள்ளை வீதியில் உள்ள மஹாராஜா வாடியில் வைத்து வாய் மொழி ஏலம் விடப்படவுள்ளது. ஏலம் கேட்க விரும்புவோா் ரூ.1,000 முன்பணம் செலுத்தி பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு காரைக்கால் நகராட்சி வருவாய்ப்பிரிவை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.