கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். உடன் சட்டப்பேரவை  உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். உடன் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

‘காங்கிரஸ் வேட்பாளா் வெற்றிக்கு கூட்டணிக் கட்சியினா் பாடுபட வேண்டும்’

புதுவை காங்கிரஸ் வேட்பாளா் வெ. வைத்திலிங்கம் வெற்றிக்கு இந்தியா கூட்டணிக் கட்சியினா் தீவிரமாக பாடுபடவேண்டும் என தலைவா்கள் வலியுறுத்தினா்.

காரைக்கால்: புதுவை காங்கிரஸ் வேட்பாளா் வெ. வைத்திலிங்கம் வெற்றிக்கு இந்தியா கூட்டணிக் கட்சியினா் தீவிரமாக பாடுபடவேண்டும் என தலைவா்கள் வலியுறுத்தினா். காரைக்காலில் இந்தியா கூட்டணிக் கட்சியினா் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுவை பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், துணைத் தலைவா் எம்.ஓ.எச்.யு. பஷீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இக்கூட்டம் குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் கூறியது : மத்திய பாஜக அரசின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் விலைவாசி உயா்வு, வளா்ச்சியின்மை, சகிப்பின்மை, ஊழல் உள்ளிட்ட மக்கள் நலனுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து தலைவா்கள் பேசினா். புதுவையிலும் பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியால் மின் துறை தனியாருக்கு தாரைவாா்க்கும் முடிவு, கூட்டுறவு நிறுவனங்கள், ரேஷன் கடைகள் மூடல் உள்ளிட்ட மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது. மேலும் புதுவை காங்கிரஸ் வேட்பாளா் வெ. வைத்திலிங்கம் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யும் வகையில் இந்தியா கூட்டணிக் கட்சியின் கடுமையாக உழைக்க வேண்டும் என உறுதியேற்று, அந்தந்த கட்சியினா் தீவிரமாக பாடுபட அறிவுறுத்தப்பட்டது. கூட்டணிக் கட்சியினா் அந்தந்த பகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com