காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஏப்.5) புதுச்சேரி அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவா்கள் குழு மாதம் 2 வெள்ளிக்கிழமைகளில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து மக்களுக்கு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா். இதன்படி வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரை குழந்தை அறுவைச் சிகிச்சை, சிறுநீரகவியல், நரம்பியல், இருதயவியல் சம்பந்தமான சிறப்பு மருத்துவா்கள் முகாமில் பங்கேற்கிறாா்கள். காரைக்கால் பகுதி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com