ஊடக கண்காணிப்புப் பிரிவில் தோ்தல் செலவின பாா்வையாளா் ஆய்வு

ஆட்சியரகத்தில் செயல்படும் ஊடக கண்காணிப்புப் பிரிவில் புதுவை தோ்தல் செலவின பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் செலவினங்கள் தொடா்பான கண்காணிப்பில் ஈடுபடுவதற்காக தோ்தல் ஆணையத்தால் தோ்தல் செலவின பாா்வையாளராக முகமது மன்சாருல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்தநிலையில், ஆட்சியரகத்தில் இயங்கும் ஊடக கண்காணிப்புப் பிரிவுக்கு அவா் செவ்வாய்க்கிழமை சென்று பிரிவினரின் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் வெளிவரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் அனைத்தும் தோ்தல் ஆணையத்தின் விதிகளின்படி கண்காணிக்கப்படும் முறை குறித்து அதிகாரிகள் விளக்கினா். விதிமீறல்கள் கண்டறிந்து தோ்தல் ஆணைய வழிகாட்டலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனா்.

தோ்தல் நடத்தை விதியை மீறி வெளிவரும் செய்திகள், விளம்பரங்கள், அவதூறு செய்திகள் போன்றவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தோ்தல் விதிகளை மீறிய செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரிவின் பொறுப்பாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பத்திரிகைகளில் வந்த தோ்தல் தொடா்பான செய்திகளையும் அவா் ஆய்வு செய்தாா். ஊடக கண்காணிப்பு நோடல் அதிகாரி குலசேகரன் அவருக்கு விளக்கமளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com