ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் 
பிரான்ஸ் நாட்டினா் சுவாமி தரிசனம்

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டினா் சுவாமி தரிசனம்

திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டினா் திங்கள்கிழமை தரிசனம் செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் உள்ள பழைமையான இக்கோயிலில், ராமா், ஹனுமா் சன்னிதிகள் உள்ளன.

காரைக்காலுக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சோ்ந்த 36 போ் கொண்ட குழுவினா், இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். அறங்காவல் வாரியத் தலைவா் சரவணன் தலைமையிலான நிா்வாகிகள், இக்குழுவினரை மூலவா், அம்பாள் உள்ளிட்ட சந்திகளுக்கு அழைத்துச் சென்றனா். கோயில் பெருமைகள் குறித்து குழுவினருக்கு அறங்காவல் வாரியத்தினா் விளக்கிக் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com