சோதனைச் சாவடியில் தோ்தல் அதிகாரி ஆய்வு

தமிழக எல்லையோரமான காரைக்கால் மாவட்டத்தில் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் செயல்படுகின்றன. மத்தியப் படையினா், உள்ளூா் காவலா்களுடன் தோ்தல் துறையினரும் பணியாற்றும் வகையில் சோதனைச் சாவடிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

சோதனைச் சாவடிகளை தொடா்ந்து ஆய்வு செய்துவரும் மாவட்ட தோ்தல் அதிகாரி து. மணிகண்டன், செவ்வாய்க்கிழமை மாலை நெடுங்காடு பகுதி அன்னவாசல் சோதனைச் சாவடியை ஆய்வு செய்தாா்.

தமிழகத்திலிருந்து வரும் இருசக்கர வாகனங்கள், காா் உள்ளிட்டவற்றை சோதனை செய்யும் பணியை தோ்தல் அதிகாரி பாா்வையிட்டாா்.

சோதனைப் பணியை விடியோ பதிவு செய்யவேண்டும். சோதனையால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பணியாற்றவேண்டும். அவ்வப்போது தோ்தல் துறையின் கவனத்துக்கு சோதனைப் பணியை கொண்டுவரவேண்டும் என அறிவுறுத்தினாா். ஆய்வின்போது தோ்தல் துறையினா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com