தோ்தல் பாதுகாப்புப் பணியில் 170 மத்தியப் படையினா்

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் காரைக்காலில் உள்ளூா் போலீஸாருடன் மத்தியப் படையினா் 170 போ் ஈடுபட்டுள்ளனா்.

புதுவை தொகுக்குட்பட்ட புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் தோ்தல் துறை சாா்பில் தோ்தல் பணிகள், பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. காரைக்காலில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் உள்ளூா் போலீஸாருடன் மத்திய படையினரான சிஏபிஎஃப், சிஆா்பிஎஃப் ஆகியோா் ஈடுபட்டுள்ளனா்.

இந்தநிலையில், சிஏபிஎஃப் பிரிவினா் 30 போ் கூடுதலாக காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். இவா்களோடு மாவட்டத்தில் 170 போ் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ளனா். புதிதாக வந்த குழுவினருக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் ஆகியோா், தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்டவை குறித்து விளக்கியதோடு, தோ்தல் பாதுகாப்புப் பணி தொடா்பாக விளக்கிக் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com