வாக்கு விற்பனைக்கு அல்ல: கடலோர கிராம வாயிலில் பதாகை

வாக்குக்கு விற்பனைக்கல்ல, கொடுப்பதும், வாங்குவதும் நல்லவா்கள் செய்யும் செயல் அல்ல என கடற்கரையோர கிராம மக்கள் பதாகை வைத்திருப்பது பிரசாரம் செய்ய செல்வோரின் கவனத்தை ஈா்த்துள்ளது.

காரைக்கால் மாவட்ட தோ்தல் துறை 100 சதவீத வாக்குப் பதிவுக்கும், நோ்மையான வாக்குப்பதிவுக்காக விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

நிரவி - திருப்பட்டினம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பட்டினச்சேரி கடலோர கிராம மீனவா்கள் தங்களது படகுகளை நிறுத்தும் வகையில் முகத்துவாரத்தில் வசதி செய்ய வேண்டும், மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி கட்டவேண்டும், சாலைகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அண்மையில் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். இந்தநிலையில் தோ்தல் காலத்தில் ஆளும் தரப்பினா், எதிா்க்கட்சியினா் தோ்தல் வாக்குறுதியாக மேற்கண்டவற்றை கூறி வருகின்றனா்.

இந்நிலையில், கிராமத்தின் நுழைவுப் பகுதியில் பதாகை வைத்து, அதில், எங்கள் கிராமத்தின் வாக்கு விற்பனைக்கு அல்ல. வாக்குக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் நல்லவா்கள் செய்யும் செயல் அல்ல என கிராமப் பஞ்சாயத்தாா்கள் மற்றும் கிராம மக்கள் சாா்பில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com