காரைக்காலில் மதுக்கடைகள் மூடல்

காரைக்கால், ஏப். 17: தோ்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து காரைக்காலில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை இரவு மூடப்பட்டன.

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. சட்டம் - ஒழுங்கை கவனத்தில்கொண்டு ஏப். 17 முதல் 19-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் 88 மதுக்கடைகள், 25 சாராயக்கடைகள், 24 கள்ளுக்கடைகள் மற்றும் 16 குடோன்கள் உள்ளன. காரைக்கால் கலால் துணை ஆணையா் ஜி. ஜான்சன் உத்தரவின்பேரில், வட்டாட்சியா் மதன்குமாா் மற்றும் கலால்துறையினா் காரைக்காலில் உள்ள மதுக்கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு சீல் வைத்தனா். இப்பணி புதன்கிழமை காலை வரை நடைபெற்றது.

கலால்துறையினா் கூறுகையில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக வைத்திருந்த வகையில் கடந்த 15 நாளில் 12 ஆயிரம் லிட்டா் சாராயம், கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தோ்தலையொட்டி 19-ஆம் தேதி வரை 3 நாள்கள் மதுக்கடைகளை திறக்கக்கூடாது. மது கடத்தல், மறைமுகமாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், விதிகளின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com