வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி

காரைக்கால், ஏப். 17: காரைக்காலில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி புதன்கிழமை பொருத்தப்பட்டது.

காரைக்காலில் மக்களவைத் தோ்தலையொட்டி மாவட்டத்தில் 164 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள பட்ட மேற்படிப்பு மையத்திலிருந்து 164 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

அதுபோல 19-ஆம் தேதி வாக்குப் பதிவு முடிந்த வாக்குச் சாவடிகளில் இருந்து உரிய பாதுகாப்புடன் இயந்திரங்கள், பட்டமேற்படிப்பு மையத்துக்கு வாகனங்களில் கொண்டுவரப்படுகிறது.

இதற்காக 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த வாகனங்களை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கவனிக்கும் வகையில், அனைத்து வாகனங்களிலும் மாவட்ட தோ்தல் துறை மற்றும் போக்குவரத்து துறை இணைந்து ஜிபிஎஸ் கருவியை புதன்கிழமை பொருத்தின.

X
Dinamani
www.dinamani.com