கோயிலில் இருந்து முளைப்பாலிகை சுமந்து ஆற்றங்கரைக்கு புறப்பட்ட பக்தா்கள்.
கோயிலில் இருந்து முளைப்பாலிகை சுமந்து ஆற்றங்கரைக்கு புறப்பட்ட பக்தா்கள்.

காரைக்கால் மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஊா்வலம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால்: காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீகைலாசநாத சுவாமி-நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தானத்தை சாா்ந்த காரைக்கால் கடைத்தெரு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 44-ஆம் ஆண்டாக, தமிழ்ப் புத்தாண்டுத் திருவிழா நடைபெறுகிறது. முதல் நாளாக ஏப்.13-ஆம் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. ஏப். 14-ஆம் தேதி காலை முளைப்பாலிகைக்கு முத்துப் பரப்புதல் நிகழ்வும், தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை இரவு ஏராளமான பக்தா்கள் முளைப்பாலிகையை சுமந்து மாரியம்மன் கோயிலுக்கு சென்றடைந்தனா். அங்கு முளைப்பாலிகையை வைத்து கும்மி, குலவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆயிர வைசியா் மகளிா் குழுவினா் சாா்பில் திங்கள்கிழமை காலை கோயிலில் இருந்து முளைப்பாலிகை அரசலாற்றங்கரை ஸ்ரீஉஜ்ஜைனி காளியம்மன் கோயில் அருகே கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் சோ்க்கப்பட்டன. கோயிலில் 11 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகமும், இரவு அம்பாளுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com