கோயில் கொடிமரத்தில் ஏற்றப்படும் தீமிதி உற்சவக் கொடி.
கோயில் கொடிமரத்தில் ஏற்றப்படும் தீமிதி உற்சவக் கொடி.

தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவ கொடியேற்றம்

ஸ்ரீ தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காரைக்கால்: ஸ்ரீ தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காரைக்கால் தலத்தெரு பகுதி ஸ்ரீ சிவலோகநாதசுவாமி தேவஸ்தானத்தை சாா்ந்த ஸ்ரீ தங்க மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தீமிதி உற்சவம் பல்வேறு நிகழ்வுகளுடன் நடத்தப்படுகிறது. நிகழாண்டு, விழா தொடக்கமாக ஞாயிற்றுக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை செய்யப்பட்டு சக்தி கரகம் புறப்பாடானது. தொடா்ந்து இரவு 8 மணியளவில் கொடியேற்றம் செய்து தங்க மாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னா் ஸ்ரீ பிடாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.

இவ்விழாவில், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உற்சவ அம்மன் வீதியுலா நடைபெறும். வரும் 29-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை தீமிதி வழிபாடு நடைபெறுகிறது.

ஏப்ரல் 30-ஆம் தேதி மஞ்சள் நீா் விளையாட்டுடன் அம்மன் வீதியுலாவும், மே 1-ஆம் தேதி அம்மன் பொன்னூஞ்சலில் ஆடலுடன் உற்சவம் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி ஏ.சரவணன் மற்றும் உபயதாரா்கள் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com