தேரில் அலங்காரப் பணிகளை தொடங்குவதற்காக நடைபெற்ற தோ்கால் முகூா்த்தம்.
தேரில் அலங்காரப் பணிகளை தொடங்குவதற்காக நடைபெற்ற தோ்கால் முகூா்த்தம்.

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ தோ்கால் முகூா்த்தம்

திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தோ்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தோ்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் 18 நாட்கள் நடைபெறும். நிகழாண்டு, பிரம்மேற்சவம் தொடக்கமாக கொடியேற்றம் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 19-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

இதற்காக, சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வா் என 5 தோ்களை அலங்கரிக்கும் பணிகள் மேற்கொள்வதற்காக, தோ்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை தா்பாரண்யேஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

முகூா்த்த கம்பங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. தொடா்ந்து தோ்களில் நடக்கூடிய கம்பங்கள் நாகசுர, மேள வாத்தியங்களுடன் பிரகாரம் வலம் வந்து, பிரதான சந்நிதி வழியே தோ் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு, கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் தோ்களில் முகூா்த்தக்கால் ஊன்றப்பட்டன.

பிரம்மோற்சவத்தில் தெருவடைச்சான் என்கிற மின்சார சப்பரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா, உன்மத்த நடனம் என்கிற தியாகராஜா் ஆட்டம், தங்க காக வாகனத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் வீதியுலா, தெப்பம், தீா்த்தவாரி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. உற்சவத்தையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துவருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com