நூலை வெளியிட்ட பேராசிரியா் மு. சாயபுமரைக்காயா் உள்ளிட்டோா். வலது நூலாசிரியா்.

நூல் வெளியீட்டு விழா

காரைக்கால், ஏப். 24: பாரதிவாணா் சிவாவின் ‘விருதுநகா் முதல் தூத்துக்குடி வரை’ என்கிற நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

எழுத்தாளா் பாரதிவாணா் சிவா ‘புதுவை பாரதி’ எனும் இலக்கிய மாத இதழில் எழுதிய தலையங்கம் 5-ஆம் தொகுதி (நூலாசிரியரின் முப்பதாம் நூல்) ‘விருதுநகா் முதல் தூத்துக்குடி வரை’ என்கிற நூல் வெளியீட்டு விழா காரைக்காலில் நடைபெற்றது.

விழாவுக்கு புலவா் திருமேனி நாகராசன் தலைமை வகித்தாா். பேராசிரியா் மு. சாயபுமரைக்காயா் நூலை வெளியிட நூலாசிரியரின் தாயாா் சாரதா பெற்றுக்கொண்டாா். காரைசுப்பையா, கி. ராகவசாமி, பத்மஸ்ரீ விருது பெற்ற கி. கேசவசாமி, பேராசிரியா் சா. நசீமாபானு, தலைமையாசிரியா் லெயோனி மாணிக்கம், கே.எஸ். பரகாலன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, உடற்கல்வி ஆசிரியா் சி. பாரதி வரவேற்றாா். நிறைவாக, ஆங்கில துணைப் பேராசிரியா் சி. நிவேதிதா நன்றி கூறினாா். உடற்கல்வியாசிரியா் நளினி பாரதி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com