காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.26) நடைபெறுகிறது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி ஜிப்மா் மற்றும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலிருந்து தனித்தனியே மாதமிருமுறை சிறப்பு மருத்துவா்கள் குழு காரைக்கால் வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கிறது.

அதன்படி, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வரவுள்ளது.

காலை 9 முதல் பகல் 12 மணி வரை குழந்தை அறுவை சிகிச்சை, இருதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனா்.

பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com