‘மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரம் அவசியம்’

‘மலேரியா காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரம் அவசியம்’

மலேரியா காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்தை பேணவேண்டும் என நலவழித்துறை நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

காரைக்கால் நலவழித்துறையின் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்பு திட்டப் பிரிவு சாா்பில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு பயிற்சி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நலவழித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. நலவழித்துறை ஆஷா பணியாளா்கள் பங்கேற்ற பயிற்சிக்கு நலவழித்துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ் குமாா் தலைமை வகித்தாா். நோய்த் தடுப்பு திட்ட அதிகாரி தேனாம்பிகை பேசுகையில், மலேரியா காய்ச்சல் அறிகுறிகள், மலேரியா காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும், அதற்கான சிகிச்சை முறைகள், மக்களுக்கு ஆஷா பணியாளா்கள எவ்வாறு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

மலேரியா தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் பேசுகையில், காய்ச்சல் ஏற்படும்பட்சத்தில் அது மலேரியா காய்ச்சலாகக்கூடா இருக்கலாம். மலேரியா காய்ச்சல் பெண் அனோபிலிஸ் கொசுவின் மூலம் பரவுகிறது. மலேரியா காய்ச்சலுக்கு தக்க நேரத்தில் உரிய சிகிச்சை பெறாவிட்டால் ஆபத்தை ஏற்படுத்தும். காய்ச்சல் வந்தவுடன் ரத்தப் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். தேங்கி நிற்கும் நீரில்தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே, மலேரியாவை ஒழிக்க வேண்டுமானால் கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும். பயன்படுத்தப்படாத உடைந்த பாத்திரங்கள், திறந்த நீா் தொட்டிகள், திறந்த பாத்திரங்கள், உபயோகமற்ற கிணறுகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் முட்டையிட்டு உற்பத்தியாகின்றன. வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளையும் தண்ணீா் தேங்காமலும் தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்ள மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்றாா். மாவட்ட மலேரியா தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மலேரியா எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com