நிலக்கரி லாரிகள் இயக்க நேரக் கட்டுப்பாடு

காரைக்காலில் நிலக்கரி ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் நிலக்கரி ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளா் லெனின் பாரதி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகள், தாா்ப்பாய் போட்டு சரியான முறையில் கட்டாமல் இயக்கப்படுவதால், லாரிகளில் இருந்து நிலக்கரி சாலைகளில் விழுந்து வாகன விபத்து ஏற்படுகிறது.

எனவே, காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் நிலக்கரி ஏற்றிய லாரிகள், சரியான அளவில் நிலக்கரியை ஏற்றி, முறையாக தாா்ப்பாய் கொண்டு மூடி இயக்க வேண்டும்.

நிலக்கரி ஏற்றிச்செல்லும் லாரிகளை காலை 7 முதல் பகல் 10 மணி வரை, மாலை 4 முதல் இரவு 9 மணி வரை காரைக்கால் மாா்க்கமாக இயக்கக் கூடாது. இதை மீறினால் போக்குவரத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com