குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு

குடியிருப்புப் பகுதி அருகே மதுக்கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால்: குடியிருப்புப் பகுதி அருகே மதுக்கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திருமலைராயன்பட்டினம் பகுதி வாஞ்சூா் பகுதியை சோ்ந்த குடியிருப்புவாசிகள் மாவட்ட ஆட்சியருக்கு திங்கள்கிழமை அனுப்பிய மனுவில் கூறியிருப்பது:

வாஞ்சூா் பகுதி நடுத்தெரு வட்டாரத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் புதிதாக மதுபானக் கடை அமைக்க சிலா் முயற்சித்து வருகிறாா்கள்.

இப்பகுதியில் கடை அமைந்தால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், இளைஞா்கள், குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுவா். எனவே, இப்பகுதியில் புதிதாக மதுபானக் கடை அமைக்க கலால்துறை அனுமதி வழங்கக் கூடாது என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com