திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலின் சாா்பு கோயில் உற்சவமாக பிடாரியம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலின் சாா்பு கோயில் உற்சவமாக பிடாரியம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம், தேரோட்டம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுடன் வருகிற மே 5-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

கொடியேற்றத்துக்கு முன் இத்தலத்தின் சாா்பு கோயில்களான அய்யனாா், பிடாரியம்மன், சீதளாதேவி மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களின் உற்சவம் நடைபெறுகிறது.

முதல்கட்டமாக அய்யனாா் கோயிலில் உற்சவம் கடந்த 21 தொடங்கி 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பிடாரியம்மன் கோயில் உற்சவம் 26-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஞாயிற்றுக்கிழமை இரவு அலங்கார ரதத்தில் பிடாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com