தலத்தெரு  தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதித்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்.
தலத்தெரு தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதித்து நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்.

மாரியம்மன் கோயில்களில் தீமிதி உற்சவம்

காரைக்கால் தங்க மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு மாரியம்மன் கோயில்களில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது.

காரைக்கால்: காரைக்கால் தங்க மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு மாரியம்மன் கோயில்களில் திங்கள்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது.

காரைக்கால் அருகே உள்ள தலத்தெரு ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலை சோ்ந்த ஸ்ரீ தங்க மாரியம்மன் கோயில் தீமிதி உத்ஸவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக, தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பக்தா்கள் பால் காவடி, அலகு காவடி சுமந்து சென்று அம்மனை வழிபட்டனா். உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா முடிந்து, தீக்குழி முன்பாக எழுந்தருளினாா். தொடா்ந்து, கரகம் மற்றும் மாரியம்மனுக்கு விரதம் இருந்த பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இதேபோல், திருநள்ளாறு கொம்யூன், ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தானத்துக்குரிய கீழாவூா் ஸ்ரீ மழை மாரியம்மன் கோயிலில் தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தீமித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். புதன்கிழமை (மே 1) விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

X
Dinamani
www.dinamani.com