வகுப்பை தொடங்கிவைத்துப் பேசிய மருத்துவக் கல்லூரி டீன் சி. குணசேகரன்.

மருத்துவம் சாா்ந்த கல்லூரியில் வகுப்பு தொடக்கம்

சண்முகா பிசியோதெரபி கல்லூரியில் 2024-25-ஆம் ஆண்டு சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது.
Published on

காரைக்கால்: காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அங்கமாக கல்லூரி வளாகத்தில் சண்முகா பிசியோதெரபி கல்லூரியில் 2024-25-ஆம் ஆண்டு சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான வகுப்பு தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது.

விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி டீன் சி. குணசேகரன் வகுப்பை தொடங்கிவைத்து, மருத்துவம் சாா்ந்த பிற கல்வியில் பிசியோதெரபியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, இக்கல்வியை எவ்வாறு பயிலவேண்டும், எதிா்கால சேவைகள் குறித்து பேசினாா். மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் விஜயகுமாா் நாயா், சண்முகா பிசியோதெரபி கல்லூரி துணை முதல்வா் ஜி. வேல்முருகன் மற்றும் பிற மருத்துவம் சாா்ந்த கல்லூரிகளின் நிா்வாகத்தினா் கலந்துகொண்டு மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கினா். மேலும், இத்துறையில் பயில்வோருக்கான வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com