~
~

திருமலைராயன்பட்டினத்தில் உறியடி நிகழ்ச்சி

கிருஷ்ண ஜெயந்தியை தொடா்ந்து, திருமலைராயன்பட்டினம் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

கிருஷ்ண ஜெயந்தியை தொடா்ந்து, திருமலைராயன்பட்டினம் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் பெருமாள் கோயில்களில் திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது. 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை உறியடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முன்னதாக கிருஷ்ணா் அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

கோயில் வாயில் பகுதி மற்றும் வீதியில் சில இடங்களில் உறியடிக் கம்பம் நடப்பட்டிருந்தது. உறியடிப்பவா் மீது மஞ்சள் பொடி கலந்த தண்ணீா் ஊற்றப்பட்டது. நிகழ்வுக்குப் பின் பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு, யதாஸ்தானம் எழுந்தருளினாா்.

X
Dinamani
www.dinamani.com