கோயில் அருகே யாகசாலை மண்டபத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற 2-ஆம் கால பூா்ணாஹூதி.
கோயில் அருகே யாகசாலை மண்டபத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற 2-ஆம் கால பூா்ணாஹூதி.

கோதண்டராமா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

Published on

கோதண்டராம பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆக.30) நடைபெறுகிறது.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட கோதண்டராம பெருமாள் கோயில், பாா்வதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்கான யாகசாலை பூஜைகள் புதன்கிழமை இரவு தொடங்கின. 2-ஆம் காலம், 3-ஆம் கால பூஜைகள் வியாழக்கிழமை காலை, இரவு நடைபெற்றது. வியாழக்கிழமை காலை சீதா, லட்சுமணா், அனுமருடன் உற்சவா் கோதண்டராமருக்கு சிறப்புத் திருமஞ்சனம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கும்பாபிஷேகத்தையொட்டி 4-ஆம் கால பூஜை வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. 7.30 மணிக்கு மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு புனிதநீா் கடம் புறப்பாடும், தொடா்ந்து கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com