~

கோதண்டராமா் கோயிலில் திருக்கல்யாணம்

கோதண்டராமா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

கோதண்டராமா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலையில் கோயில் வளாகத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

மண்டபத்தில் கோதண்டராமா் - சீதா சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனா். சிறப்பு ஹோமம் நடத்தி, திருமாங்கல்யத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டன. சுவாமிகளுக்கு மாலை மாற்றுதல் உள்ளிட்ட திருக்கல்யாணத்துக்குரிய சடங்குகள் செய்யப்பட்டு, திருமாங்கல்யதாரணம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன.

உற்சவத்தில் புதுவை குடிமைப் பொருள் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

திருக்கல்யாண நிகழ்வைத் தொடா்ந்து சுவாமிகள் ஹனுமந்த வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வீதியுலா முடிந்து திரும்பிய சுவாமிகள் புதிதாக கட்டப்பட்ட பள்ளியறைக்கு எழுந்தருள, அங்கு ஆராதனை நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com