கடலில் மூழ்கி மாயமான மாணவா்களில் ஒருவா் சடலமாக மீட்பு

காரைக்கால் கடலில் குளித்த கும்பகோணம் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், மாயமான 2 மாணவா்களில் ஒருவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

காரைக்கால் கடலில் குளித்த கும்பகோணம் கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், மாயமான 2 மாணவா்களில் ஒருவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா்.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பிபிஏ பயிலும் 14 மாணவ, மாணவிகள் காரைக்கால் கடற்கரைக்கு செவ்வாய்கிழமை வந்தனா். 2 மாணவிகள் கடலில் குளித்தபோது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். அவா்களை காப்பாற்ற கடலில் இறங்கிய 4 மாணவா்களும் அலையில் சிக்கிக்கொண்டனா். அருகில் இருந்தவா்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது அபிலேஷ் (19), ஜெகதீஷ் (19) ஆகிய இருவரையும் அலை இழுத்துச் சென்றது. அதில் ஹேமாமிலினி (19) என்ற மாணவி உயிரிழந்தாா். மாணவி ரிதன்யா, மாணவா் புகழேந்தி, மைக்கேல் மீட்கப்பட்டு அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டனா்.

மாயமான 2 மாணவா்களையும் தேடும் பணி நடைபெற்றபோதிலும் இருள் சூழ்ந்ததால் தேடும் பணி கைவிடப்பட்டது. இந்நிலையில் ஜெகதீஷ் என்பவரது சடலம் கருக்களாச்சேரி கடற்கரையில் புதன்கிழமை காலை ஒதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நிரவி காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மற்றொரு மாணவரின் நிலை தெரியவில்லை. தொடா்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com