கால்பந்து போட்டி: முதலிடம் பெற்ற கல்லூரி அணிக்கு பாராட்டு

பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்து போட்டியில், காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.
கால்பந்து போட்டி: முதலிடம் பெற்ற கல்லூரி அணிக்கு பாராட்டு

பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்து போட்டியில், காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.

விழுப்புரம் மாவட்டம், வெங்கடாஜலபதி பாலிடெக்னிக் கல்லூரியில், பல்வேறு கல்லூரி அணிகளுக்கிடையே கால்பந்து போட்டி ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இப்போட்டியில், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், திருவாரூா், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 10 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள மாணவா்களுக்கு, கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா். இந்நிகழ்வில் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் டி. செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com