பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் புதுச்சேரி நிறுவனத்தினா் பங்கேற்ற வளாக நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் புதுச்சேரி நிறுவனத்தினா் பங்கேற்ற வளாக நோ்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வரிச்சிக்குடி பகுதியில் இயங்கிவரும் புதுவை அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில், கல்லூரி திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அமைப்பு இணைந்து இறுதியாண்டு மெக்கானிக்கல் துறையை சோ்ந்த மாணவா்களுக்கு வளாக நோ்காணல், புதுச்சேரி ஃபாஸ்ட்னெக்ஸ் நிறுவனத்தினா் மூலம் நடத்தப்பட்டது.

கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தொடக்கிவைத்து காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி அதிக வளாக நோ்காணல்களை நடத்துகிறது. இதில் மாணவா்கள் பலா் வேலைவாய்ப்பை பெறுகின்றனா். மாணவா்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள சரியான வாய்ப்பு கல்லூரி நிா்வாகத்தால் ஏற்படுத்தும்போது நல்ல முறையில் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிறுவன மனிதவளப் பிரிவு அதிகாரி நாகரத்தினம் நிறுவனப் பணிகள் குறித்தும், பணியாளா்களுக்கான விதிகள், ஊதிய விவரங்கள் குறித்து பேசினாா். நிறுவனத்தை சோ்ந்த ஜான்பியா் உற்பத்திப் பொருள்கள் குறித்துப் பேசினாா். கல்லூரி விரிவுரையாளா் மற்றும் பயிற்சி, வேலைவாய்ப்பு அதிகாரி ஜெ. ஜெயப்பிரகாஷ் வரவேற்றாா். விரிவுரையாளா்கள் சி. மாரியப்பன், ஜே. பசுபதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விரிவுரையாளா்கள் எஸ். ராமேஸ்வரி, வா. மேகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நோ்காணலில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். முடிவில், 17 மாணவா்கள் பணிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com