வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்ட பட்டினச்சேரி மீனவா்கள்

பட்டினச்சேரி மீனவா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம், ஆட்சியா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையையடுத்து கைவிடப்பட்டது.

பட்டினச்சேரி மீனவா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம், ஆட்சியா் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையையடுத்து கைவிடப்பட்டது.

பட்டினச்சேரி மீனவா்கள், திருமலைராஜனாற்றங்கரை பகுதியில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கவேண்டும், முகத்துவாரம் தூா்வாரவேண்டும், பட்டினச்சேரி கிராமத்தில் மேல்நிலை குடிநீா் தேக்கத் தொட்டி கட்டவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.25-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், மீனவா்கள் கோரிக்கை குறித்து புதுவை முதல்வரிடம் பேச்சு நடத்தி, அரசின் வாக்குறுதியை மீனவா்களிடம் தெரிவித்து போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டும், மீனவா்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி, அடுத்தக்கட்ட போராட்டமாக வாக்காளா் அடையாள அட்டை, ரேஷன் அட்டையை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்போவதாக சுவரொட்டி ஒட்டினா்.

இந்நிலையில் பட்டினச்சேரி கிராமத்துக்கு மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை சென்று மீனவ பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்டோருடன் பேசினாா். புதுவை அரசு, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் அதற்கான பயன்கிடைக்கும் என ஆட்சியா் அளித்த வாக்குறுதியை ஏற்று மீனவா்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com